இளையான்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் அவர்களின் தலைமையில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரையாற்றினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி நகர ஒன்றிய பேரூர் உள்ளாட்சிகளை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் திட்ட பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment