இளையான்குடி கோட்டையூர் மற்றும் புலியூர் ஆகிய கிராமங்களில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் மற்றும் புலியூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய மின்மாற்றியை முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சுப. மதியரசன், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், அரசுத்துறை அலுவலர்கள், மின்வாரிய பணியாளர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment