மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா கல்வி குழுமத்தின் சார்பாக பாபா மெட்ரிக் பள்ளி, பாபா கார்டனில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 3 வயது முதல் 8 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து வந்தனர். மதநல்லிணக்க அடிப்படையில் வேற்றுமை பாராமல் அனைத்து மாணவர்களும் கண்ணன் - ராதை வேடம் அணிந்து வந்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. பள்ளி மாணவர்கள் நலன் கருதி பசுமாடு, கன்று வரவழைக்கப்பட்டு கோமாதா பூஜை பள்ளியில் நடைப்பெற்றது. கிருஷ்ணன் - ராதை வேடம் அணிந்து வந்த 150 மாணவர்களுக்கும் பரிசு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
'உங்கள் வாழ்க்கையில் அன்பு மகிழ்ச்சி ஆதரவு மற்றும் செல்வம் ஆகியவை கிருஷ்ணரின் ஆசிர்வாதத்தால் நிரம்பட்டும்' என்று கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்த அம்மா பி. ராஜேஸ்வரி அவர்கள், விழாவிற்கு தலைமை தாங்கி செல்வன் ஹரிஷ் மித்ரனுக்கு முதல் பரிசும் வழங்கினார். பள்ளி தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் கனிஷ்கா சாருமதிக்கு இரண்டாம் பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் ஶ்ரீமதிக்கு மூன்றாம் பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் எம். சாரதா முகமது நதிம், கதிஜா, அஸ்விதா ராயல், அனுசியா, க்ரிஷ்டிகா செரில், கிஃப்டா செரில், மெயுரிஷா பெல்சி, மல்கிஜா பெல்சி ஆகிய மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார்.
No comments:
Post a Comment