மானாமதுரையை அடுத்த அன்னவாசல் புதூர் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அன்னவாசல் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோபால கிருஷ்ணர் திருக்கோயிலில் குரோதி வருடம் ஆவணி 10 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் காலை ஆறு மணி அளவில் சுதர்சன ஹோமம் மற்றும் கோமாதா பூஜையுடன் விழா தொடங்கப் பெற்று 10 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. மேலும் மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குழந்தைகள் சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டு இவ்விழாவின் சிறப்பம்சமாக அமையப்பெற்றது.
இந்நிகழ்வில் அன்னவாசல் புதூர் கிராம பொதுமக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தகோடி பெருமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு பகவான் கிருஷ்ணரின் அருள் பெற்று சென்றனர்.
No comments:
Post a Comment