சூராணத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி சூராணம் கிராமத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டதோடு நலத்திட்டங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி முன்னாள் சட்டமன்ற வடக்கு ஒன்றிய செயலாளர் உறுப்பினர் சுப. மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், ஒன்றிய குழு தலைவர் முனியாண்டி, வட்டாட்சியர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன் மற்றும் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நித்திபா கமல், பிரிட்டோ, கதிர்வேல், ராக்கு, சுதா, சசிகலா, ராமலட்சுமி, லீமாரோஸ் சேவியர், ஒன்றிய துணைச் செயலாளர் ராதாரெத்தினம், சிவநேசன், ஒன்றிய பொருளாளர் ஆரோக்கியதாஸ், முன்னாள் கவுன்சிலர் போஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment