மானாமதுரையில் நடைபெற்ற வைரம் அரிமா லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைரம் அரிமா லயன்ஸ் சங்கம் 2024 - 2025 க்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பாபா மெட்ரிக் பள்ளியில் 2023-2024 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன் கு. கடோத்கஜனுக்கு வைரம் அரிமா லயன்ஸ் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆளுனர் லயன் டாக்டர் அ. சசிக்குமார், தலைவர் எஸ். சிரஞ்சீவி, செயலாளர் ஏ. சி. மாரிமுத்து, பொருளாளர் ஜெ. செழியன் ஆகியோர் மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் மானாமதுரை வைரம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பாபா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கபிலன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment