மானாமதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நில மீட்பு பொது மாநாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்தும், விவசாய நிலங்கள் மற்றும் விவசாயத்தை அழிக்கும் வகையில் கிராவல் மணல் அல்ல முயற்சி நடைபெற்று வருவதாகவும், மானாமதுரை தாலுகா நவத்தாவு கிராமத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு நில பட்டா வழங்க வலியுறுத்தியும், நில மோசடி மணல் கொள்ளையை தடுத்து விவசாயிகளை பாதுகாத்திட தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நில மீட்பு பொது மாநாடு மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment