சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் குழு மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலகின் சார்பாக போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியும், விழிப்புணர்வுக் கூட்டமும், விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில்மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்தார். கல்லூரியின் வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் நிலோபர்பேகம் உறுதிமொழி வாசிக்க பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் போதை பழக்கத்திற்கு எதிரானஉறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் என்றும், போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என்றும்,எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன் என்றும், போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, கொடி அசைத்துத் துவக்கி வைக்க, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் துவங்கி கல்லூரி சாலை வழியாக கண்ணதாசன் மணி மண்டபத்தை நிறைவடைந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் பால் துரை மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, சாக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் அறிவுச் சுடர், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் முனைவர் துரை ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கல்லூரியின் உமையாள் அரங்கில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் ரவீந்திரன், அழகப்பாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருப்பையா, கே எம் சி மருத்துவமனை மருத்துவர் காமாட்சி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருளின் தீமையைக் குறித்தும் அதனை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் குறித்தும், விளக்கிப்பேசினர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் லட்சுமணக் குமார், முனைவர் செந்தில் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment