இளையான்குடி சாலைகிராமத்தில் ஆசிரியர் ச. அரங்கசாமி அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைகிராமத்தை அடுத்த பஞ்சாத்தி கிராமத்தில் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை சுடரொளி ஆசிரியர் திரு ச. அரங்கசாமி அவர்களின் படத்திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நினைவேந்தல் உரை ஆற்றினார். மேலும் துணைத் தலைவர் திராவிடர் கழகம் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோரும் நினைவேந்தல் உரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் ம. கு. வைகறை, திராவிடர் கழகம் மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி, திராவிடர் கழகம் மாவட்ட துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், காரைக்குடி நகர திராவிடர் கழகம் தலைவர் ந. ஜெகதீசன், காரைக்குடி நகர திராவிடர் கழகம் செயலாளர் தி. க. கலைமணி, கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், மாவட்ட திமுக விவசாய அணி காளிமுத்து, வழக்கறிஞர் ஜான்சேவியர், ஒன்றிய அவைத் தலைவர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் சபின்பவுல், ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய துணை செயலாளர் சிவனேசன், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன் மற்றும் ஆரோன் கிங், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment