மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றியங்களின் சார்பாக மக்களை வாட்டி வதைக்கும் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்தும், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் கலந்து கொண்டு கண்டன பேருரையாற்றினார்.
இந்நிகழ்வில் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் குகன் மூர்த்தி, சிவகங்கை தொகுதிச் செயலாளர் கல்லல் முத்துக்குமார், தொகுதி கொள்கை பரப்புச் செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் மானாமதுரை திருப்புவனம் இளையான்குடி உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் பெரும் திரளாக இக்கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment