காரைக்குடி ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் மகரிஷி கல்வி குழுமம் சார்பாக இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அருளாட்சி புரியும் ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மனுக்கு மகரிஷி கல்வி குழுமத்தால் 1008 சங்காபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார அபிஷேகம் செய்து, சிவாச்சாரியார்களால்யாகவேள்வி நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது., இவ்விழாவில் மகரிஷி கல்விக் குழும நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.,
இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு பொங்கல், குளிர்பானம், ஆடி கூழ் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.,மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மிக அற்புதமான முறையில் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment