தமிழக முதல்வருக்கு தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்.
கர்மவீரர் காமராஜர் அவர்களது பிறந்த நாளில், தமிழக மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இத்திட்டத்தினால் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதுடன், தாய்மார்களின் காலை உணவு தயாரிக்கும் நேரத்தையும், பொருட்செலவையும் சேமிக்கிறது. மேலும் இதனால் பள்ளிகளில் மாணக்கர்களின் வருகையும் அதிகரிக்கும்.
இத்தகைய உன்னத திட்டத்தினை வழங்கிய தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி சிதம்பரம் அவர்கள் தனது 'எக்ஸ்' தளத்தில் தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment