ராஜகம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ள சுமார் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தினை அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களும் பயன்பெறக்கூடிய வகையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அரசு ஆணையிட்டு தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளான இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜகம்பீரம் ஊராட்சியில் இயங்கி வரும் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை, மானாமதுரை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, ராஜகம்பிரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிபூர் ரகுமான், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் காஜா மைதீன், டாக்டர் சகுபுர் சாதிக், முருகன், சையது, ஆரோக்கியசாமி, அழகர், அரசு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், திமுக கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் உள்ளாட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment