தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் குரோதி வருடம் ஆவணி மாதம் ஆறாம் தேதி ஆகஸ்ட் 22-ல் நடைபெற இருப்பதை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலர் மு. வெங்கடேசன் செட்டியார் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கோயில் அறங்காவலர்கள், கோயில் நிர்வாகிகள், கோயில் பணியாளர்கள், தாயமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் பக்த கோடி பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீ கோதி வருடம் ஆவணி 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ஒன்று முதல் ஆறாம் கால பூர்ணாஹீதி தீபாராதனை மற்றும் யாகசாலை பூஜைகள் இதுக்கு அடுத்த நடைபெற உள்ளது. இக்கும்பாபிசேகத்தை சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் தலைமை குருக்கள் சர்வ சாதகம், விகாஸ் ரத்னா டாக்டர் கே பிச்சை குருக்கள் நடத்தி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment