சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கராத்தே சாம்பியன் போட்டியில் பதக்கங்களை குவித்த மானாமதுரை கராத்தே பள்ளி மாணவர்கள்.
தமிழ்நாடு விளையாட்டு கராத்தே சங்கம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான சப்-ஜூனியர் தமிழ்நாடு சாம்பியன் போட்டி சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் ஜூலை 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டிலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்ககள் வென்றார்கள்.
குறிப்பாக மானாமதுரை ரயில்வே காலனியில் வசித்து வரும் எம். ரவீந்திரன்- பாலபிரியா ஆகியோரின் இரண்டாவது மகள் ர. லலினா 12 வயது பெண்கள் சண்டைப் பிரிவு 40 கிலோ எடை பிரிவில் முதல் பரிசான தங்கப்பதக்கம் மற்றும் கட்ட பிரிவில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அடுத்ததாக மானாமதுரையை அடுத்த மேலப்பாசாலையில் வசித்து வரும் முத்து கிருஷ்ணன்-சுமதி ஆகியோரின் மகன் மு. திக்க்ஷன் 11 வயது சண்டை - 45 கிலோ எடை பிரிவில் மூன்றாம் பரிசான வெண்கலப்பதக்கம் வென்றார் .
அடுத்தபடியாக மானாமதுரை ரயில்வே காலனியில் வசித்து வரும் துரைராஜா-மேனகா ஆகியோரின் மகன் து. ஜெகத் அர்சிக் 9 வயது சண்டை - 30 கிலோ எடை பிரிவில் மூன்றாம் பரிசான வெண்கலப்பதக்கம் வென்றார்.
கூடுதலாக மானாமதுரை பிருந்தவனத்தில் வசித்து வரும் முத்துகிருஷ்ணன் கற்பகம் பேக்கிரி-வீரலக்ஷ்மி ஆகியோரின் மகன் மு. ஸ்ரீபிரணவ் 8 வயது சண்டை - 40 கிலோ எடை பிரிவில் ஆறுதல் பரிசு பெற்றதோடு, தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை இம்மாணவர்கள் வென்று, ஆல் இந்தியா சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மானவர்களுக்கு பயிற்சி அளித்த முனைவர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் சிவ. நாகர்ஜுன் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். மேலும் பதக்கங்கள் வென்ற மாணவ மாணவிகளை பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment