சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக விஜயை அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகளை சிங்கம்புணரி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் வடக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலைவர் தளபதி விஜய் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச்செயலாளர் திரு. N.ஆனந்த்(Ex.mla) வழிகாட்டுதலின் படி மாவட்டத் தலைவர் M.ஜோசப் தங்கராஜ் ஆலோசனை படி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மட்டிக்கரைப்பட்டியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மதிய உணவு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயம், மெடல் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய மகளிர் அணியினர் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment