மானாமதுரை மற்றும் திருப்புவனத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்புவனத்தில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காணொளி காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் அதன் தொடர்ச்சியாக திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் குத்து விளக்கேற்றி சிறப்புறையாற்றினார்.
இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் டவுன் சேர்மன் சேங்கைமாறன், திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் திருப்புவனம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சின்னையா, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் அழ. மூர்த்தி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், பேரூர் கழக செயலாளர் நாகூர்கனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்பிரகாசம், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சியை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment