மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர்.
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுதிறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் வழங்கினார். இதில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த், சிவகங்கை நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் கே. எஸ். மணிமுத்து, இயன்முறை சிகிச்சையாளர் பிரியா, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயராமன், முத்துராமலிங்கம், ஒன்றிய குழு துணை தலைவர் சரசுவதி அண்ணா, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா மாரி, மாவட்ட ஆதிதிராவிடர் குழு அமைப்பாளர் சிங்கமுத்து, மாற்றுதிறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment