டெல்லியில் நடைபெறும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், ஜாயிண்ட் அட்வகேட்ஸ் அசோசியேசன் கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பாக மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த நீண்ட உரையை பாராளுமன்ற உறுப்பினர் நிகழ்த்தினார். போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment