மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தட எண்கள் கொண்ட பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்க்கண்ட வழித்தடங்களில் புதிய வழித்தட எண்கள் கொண்ட கூடுதல் பேருந்துகளை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அதன்படி புதிய எண் கொண்ட மூன்று பேருந்துகளின் வழித்தடங்கள் பின்வருமாறு, பேருந்து வழித்தட எண் - 18 மானாமதுரையில் புறப்பட்டு ஆலம்பச்சேரி நெட்டூர் வழியாக இளையான்குடி வரை, பேருந்து வழித்தட எண் - 26 மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திலிருந்து தெ.புதுக்கோட்டை வழியாக பரமக்குடி வரை மற்றும் மானாமதுரை பேருந்து நிலையம் முதல் மதுரை மற்றும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முதல் இளையான்குடி வழியாக ஆர்.எஸ்.மங்கலம் வரை செல்லக்கூடிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் பொன்னுச்சாமி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜாமணி, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணாத்துரை, நகர் மன்ற துணை தலைவர் பாலசுந்தர், தொழிலாளர் அணி புவியரசு, நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், இந்துமதி திருமுருகன், மாவட்ட மகளிர் அணி வளர்மதி, இராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ரகுமான், மாரநாடு சந்திரசேகர், ஆலம்பச்சேரி நிதி, அரசு துறை அதிகாரிகள், ஆட்டோ சங்க உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment