மதுரையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் "பெஸ்ட் எங் ஐகானிக்" விருது பெற்ற மானாமதுரை இளைஞர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியை சேர்ந்த பூமிநாதன் - காசியம்மாள் தம்பதியரின் மகன் அரவிந்த் (24) தனது வீட்டின் அருகே தேனி மற்றும் காளான் ஆகியவற்றை தனது தனித்திறனை கொண்டு சொந்த முயற்சியில் மிகச்சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இம்மாபெரும் செயல்பாட்டை இச்சிரிய வயதில் மேற்கொண்ட அரவிந்த் அவர்களை பாராட்டி மதுரையில் நடைபெற்ற தனியார் தொழில் துறை நிறுவனங்கள் சேர்ந்து நடத்தும் விருது வழங்கும் விழாவில் 'பெஸ்ட் எங் ஐகானிக்' விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் அரவிந்த் அவர்கள் மானாமதுரையில் உள்ள ஒ.வெ.செ பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment