சிவகங்கையில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

சிவகங்கையில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

 


சிவகங்கையில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம். 


சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்கப்பட்டதைக் வன்மையாக கண்டித்து பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்களை புறந்தள்ளி ஒரு தலைப்பட்சமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக நிர்வாகிகள் எழுச்சி பேருரையாற்றி, பதாகைகளை கையில் ஏந்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


இந்நிகழ்வில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு அப்துல்லா, மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் திரு தென்னவன், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மானாமதுரை நகர் கழகச் செயலாளர் க. பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மானாமதுரை நகர மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, சிவகங்கை நகர மன்ற தலைவர் திரு சி. எம். துரைய ஆனந்த், சிவகங்கை மாவட்ட மகளிர் அணி, மாவட்ட இளைஞரணி மாவட்ட இலக்கிய அணி நிர்வாகிகள், திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் உள்ளாட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெரும் திரளாக  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad