சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 2024 -2025 கல்வியாண்டில் பயின்று வரும் எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் முன்னேற்றத்தை குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக "வரலாற்று பக்கத்தில் உங்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்கவைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது" – டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அப்துல் கலாம் அவர்களின் திருஉருவப்படத்திற்கு பள்ளியின் தாளாளர் திரு கபிலன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்திய பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment