மானாமதுரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.
உடல்நலக் கல்வியாளர்கள் மேம்பாட்டு அறக்கட்டளை ஐம்பெரும் விழா 2024க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னக்கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு அ. கல்யாணசுந்தரம் அவர்களுக்கு மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர் பெரியகருப்பன் அவர்கள் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவ்விருதானது உடல்கல்வி துறையில் சிறந்த பணியையும் உயர்ந்த சேவையையும் கல்வி மாவட்டத்தில் சிறந்த சேவையையும் பாராட்டி வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் உடற்கல்வி ஆசிரியர் திரு கல்யாணசுந்தரம் அவர்கள் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்கல்வி மாணவர்களுக்கு கல்வியின் பொருட்டு பல உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment