மானாமதுரையில் தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பு சார்பாக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பு சார்பாக சிவகங்கை மேற்கு மாவட்டம் மானாமதுரை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரத் தலைவர் திரு பாபுராஜ் தலைமையிலும், மாவட்டத் துணை தலைவர் பிரபாகரன் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் அறிஞர் திரு பி. கே அவர்கள் கலந்துக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, "மானாமதுரை நகர் பகுதிகளை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் சில வாரங்களாக மூடப்படாமல் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு சரிசெய்திட கவனம் செலுத்த வேண்டும். மானாமதுரை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களில் விலைப்பட்டியல் அமைத்திட வேண்டும். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முதல் மானாமதுரை பேருந்து நிலையம் வரை தனி பேருந்துகள் கூடுதலாக இயக்க வேண்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்" என்கிற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் தலைமை செயலர். ஜி. எல். கேவிந்தராஜ், மாவட்ட இளைஞர் செயலர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் கே. பாரமேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்துச கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் முழு மணதோடு ல. பாசு பதிவி எற்றுக் கொண்டார். அவரது பணி சிறக்க தேசிய உரிமை களம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment