காரைக்குடி கழனிவாசல் செல்லஞ்செட்டி ஊரணி வழியில் வடக்கு நோக்கி அருப்பாலித்து வேண்டுவோற்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வடக்கு வாசல் மாரியம்மன் கோவில் உற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.ஊ. சி ரோடு செல்லச்செட்டி ஊரணி வழியில் வடக்கு நோக்கி அருள்பாலித்து வேண்டியவருக்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வடக்கு வாசல் மாரியம்மன் கோவில் 17 ஆம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது முன்னதாக 14.7.2024 அம்மனுக்கு பூர்ணாகுதி தீபஆராதனையுடன் தொடங்கிய காப்பு கட்டு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.,பின்பு 18.7.2024 அன்று திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது 19.7.2024 அன்று அம்மனுக்கு பூச்சொரிதல் விழா அதி விமர்சையாக கொண்டாடப்பட்டது.,பின்பு 20. 7. 2024 அன்று அம்மனுக்கு கரகம், மது முளைப்பாரி போன்ற நேர்த்திக்கடன் பக்தர்களால் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது பின்பு 21.7.2024 அன்று அம்மனுக்கு பால்குடம்,வேல் போடுதல், தீச்சட்டி மற்றும் பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்வு நடைபெற்றது.,அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது பின்பு மாலை மது,ஊரணியில் கரைக்கப்பட்டு காப்பு பெருக்குதல் நிகழ்வு நடைபெற்றது.,அன்று இரவு அம்மன் திருவீதி உலா நூற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடைபெற்று திருவிழா இனிதே நிறைவேறியது.,விழாவிற்கான நிகழ்வுகளை விழா குழுவினர் வெகு சிறப்பாக செய்திருந்தார்கள் இவ்விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் புள்ளி தாதர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment