சிவகங்கையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையம் எதிரில் பத்மஸ்ரீ நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. ராஜசேகரன் மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு சஞ்சய் காந்தி ஆகியோரின் தலைமையில் சிவாஜி கணேசன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீவித்யா, மாவட்ட வட்டார நகர பேரூர் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment