இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் பொது சுகாதார பயன்பாட்டிற்கு புதிய பேட்டரி வாகனங்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சி பொது சுகாதார பயன்பாட்டிற்கு புதிய பேட்டரி வாகனங்களை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இளையான்குடி பேரூராட்சி தலைவர் பி. ஏ. நஜுமுதின், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், இளையான்குடி பேரூராட்சி துணை தலைவர் இப்ராகிம், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். கோபிநாத், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி, முன்னாள் நகர் செயலாளர் ரகூப், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாவட்ட தொண்டரணி புலிக்குட்டி, ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், இளையான்குடி வார்டு கவுன்சிலர்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment