இளையான்குடி அண்டக்குடி ஊராட்சியில் பல்நோக்கு அரங்கத்தினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி ஒன்றியம் அண்டக்குடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 9.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு அரங்கத்தினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், ஒன்றிய குமு தலைவர் முனியான்டி, கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப.;தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி கருணாகரன், சாரதி, சோலைராஜ், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment