மானாமதுரை பகுதிகளில் தேர்தலில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர்.
நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் கை சின்னத்திற்கு போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்கள் வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை வழங்கிய வாக்காளர் பெருமக்களுக்கு பாராளுமன்ற தொகுதி முழுவதும் மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள பள்ளிவாசல் மற்றும் சூராணத்தில் உள்ள திருச்சபைக்கு சென்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி சிதம்பரம் அவர்களின் சார்பாகவும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாகவும் ப. சிதம்பரம் அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜூவ் கண்ணா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு புருஷோத்தமன், வட்டார தலைவர்கள், மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், தேவாலய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment