மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடிய பள்ளி மாணவர்கள்.
பெருந்தலைவர் கர்மவீரர் திரு காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிகுலேஷன் பள்ளி, பாபா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, பாபா மெட்ரிக் பள்ளி பாபா கார்டன் மிளகனூர் சாலையில் உள்ள பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் மிகச்சிறப்பான முன்னேற்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது .
இவ்விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி மற்றும் நடன போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களும் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர். பெரும்பாலான மாணவர்கள் காமராசர் வேடமிட்டு காமராசரின் உருவப்படத்தை ஏந்திவந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை பள்ளியின் நிறுவனர் திருமதி பி. ராஜேஸ்வரி அம்மா அவர்கள் தொடங்கி வைக்க, பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் ஆட்சியர் திருமதி ஆர். மீனாட்சி ஆகியோர் தலைமை ஏற்று சிறப்பித்தனர். இவ்விழாவின் இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவின் முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி ஆர். சாரதா மற்றும் பொறுப்பாசிரியர் திருமதி எம். பாண்டியம்மாள் ஆகியோர் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment