காரைக்குடி சேர்வார் ஊரணி ஸ்ரீ நவேடி காளியம்மன் கோவில் பதினெட்டாம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்வார் ஊரணி ஸ்ரீ நவேடி காளியம்மன் கோவில் பதினெட்டாம் ஆண்டு பால்குடத் திருவிழா நிகழும் குரோதி வருடம் ஆனி மாதம் 28ஆம் தேதி 12/7/2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் பூச்சொரிதல் விழா சேர்வார் ஊரணி பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டது., பின்னர் செவ்வாய்க்கிழமை அன்று காலை கணபதி ஹோமமும் காலை ஏழு 45 மணிக்கு மேல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது., அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் அம்மனுக்கு மது முளைப்பாரி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது., பின்னர் புதன்கிழமை அன்று காலை 8 மணி அளவில் காரைக்குடி சேர்வார் ஊரணி பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம், அக்னிசட்டி, வேல் போடுதல் மற்றும் பறவை காவடி எடுத்து ஸ்ரீ நவேடி காளியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது., அன்று மதியம் 11 மணிக்கு மேல் கோவில் முன்பாக அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது.,மாலை 5 மணிக்கு மேல் மது முளைப்பாரி கரகம் நவேடி காளியம்மன் கோவிலில் இருந்து சேர்வார் ஊரணி வழியாக பருப்புரணி சென்றடைந்தது., இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்., மேலும் அன்று 9:00 மணி அளவில் வள்ளி திருமண நாடகம் வெகு விமர்சையாக நடைபெற்றது., மேலும் விழா ஏற்பாடுகளை திரு.சி.மெய்யர் 11வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்,விழா குழுவினர்கள், இளைஞர்கள் மற்றும் சேர்வார் ஊரணி பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment