காரைக்குடி லயன்ஸ் கிளப் ஆஃப் காஸ்மோ பாலிட்டன் சங்கத்தின் நான்காம் ஆண்டில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் தனியார் மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் புதிய பதவியேற்பு விழா நடைபெற்றது.,புதிய நிர்வாகிகளை PMJS லயன் முன்னாள் மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபு அவர்கள் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்தினார்.,PMJS லயன் இரண்டாம் துணை ஆளுநர் ஆறுமுகம் அவர்கள் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
MJF மாவட்ட சேர்மன் மணிகண்டன் அவர்கள் விருது பெறுவோற்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார் இந்நிகழ்ச்சியில் 5 புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைக்கப்பட்டனர்.,இந்நிகழ்ச்சியில் நண்பர்கள், பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் பெறவந்தோர் என பலதரப்பட்டவரும் புடை சூழ புதிய சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது., ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.,
2019 -2020 ஆம் ஆண்டுகளில் வேர்ல்டு நம்பர் ஒன் கவர்னர் பட்டத்தைப் பெற்ற MJF முருகன் அவர்கள் புதிய உறுப்பினர்களை அறிமுக படுத்தினார் இவ்விழாவில் சங்கத்தின் தலைவராக லயன் சங்கரநாராயணன் அவர்கள் தலைவராகவும், லயன் விஸ்வநாதன் அவர்கள் செயலாளராகவும்,முகமது அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பதவிகளை ஏற்றுக்கொண்டனர் பதவி பெற்ற ஒவ்வொருவரையும் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சங்க நிர்வாகி சரவணன் அவர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment