சிவகங்கையில் ஆடு இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பாக உணவு பாதுகாப்பு துறையின் அதிகாரி திரு சரவணகுமார் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் ஆடு இறைச்சி கடைகளான 'மட்டன் ஸ்டால்களில்' தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஜஸ்டிஸ் ராஜசேகரன் சாலையில் உள்ள காஜா மட்டன் ஸ்டாலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது பிரிட்ஜில் வைக்கப்பட்ட சுமார் 15 கிலோ பழைய இறைச்சிகளை துப்புரவு பணியாளர்களின் உதவியோடு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு குப்பையில் கொட்டி அளிக்கப்பட்டது. பின்னர் காஜா மட்டன் ஸ்டால் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூபாய் 3000 அபதாரம் விதிக்கப்பட்டது.
நகராட்சியில் உள்ள ஸ்டாட்டர் ஹவுஸில் சீல் வைக்க பட்ட பின்னர் தான் இறைச்சிகளை கடை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்று அனைத்து இறைச்சி கடை வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மூன்று கடைகளில் ஆய்வு செய்தபோது சுமார் 8 கிலோ நெகிழி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்த நகராட்சி நிர்வாகத்தினர் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 2000 வீதம் அபதாரம் விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment