விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் அ. சிவா அவர்களை ஆதரித்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் வேம்பி பகுதியில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் செலுத்தி வெற்றிபெற செய்யுமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் திரு தென்னவன் மற்றும் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் தேர்தல் பணி மற்றும் வாக்கு சேகரிப்பில் சிவகங்கை மாவட்ட கழக துணை செயலாளர் சேங்கைமாறன், விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய நகர நிர்வாகிகள், மானாமதுரை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment