புத்தகத் திருவிழா போட்டிகளில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற 22 ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழாவில் கல்லூரி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகளில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று பரிசுகளைக் குவித்தனர். கல்லூரியின் சார்பாக பங்கேற்ற முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி பவித்ரா கட்டுரைப் போட்டியில் முதல் பரிசையும், நூல் மதிப்புரையில் முதல் பரிசையும், சிறுகதையின் முதல் பரிசையும், கவிதையில் இரண்டாம் பரிசையும் பெற்றார். இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பயிலும் மாணவி சார்மதி பேச்சு போட்டியில் மூன்றாம் பரிசையும், நூல் மதிப்புரையில் மூன்றாம் பரிசையும் பெற்றார். இரண்டாம் ஆண்டு இளங்கலை தமிழ் பயிலும் மாணவி மாதரசி பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசையும், ஓவியப்போட்டியில் மூன்றாம் பரிசையும், நூல் மதிப்புரையில் மூன்றாம் பரிசையும், கவிதைப் போட்டியில் முதல் பரிசையும் பெற்றார். இரண்டாம் ஆண்டு புவி அமைப்பியல் பயிலும் மாணவி அபிநயா பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார். பரிசு பெற்ற மாணவிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி பாராட்டி வாழ்த்தினார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், நுண்கலை மன்ற உறுப்பினர்கள் முனைவர் ஷர்மிளா, முனைவர் செல்வமீனா, முனைவர் லட்சுமண குமார் ஆகியோர் மாணவியரை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.
No comments:
Post a Comment