மானாமதுரை டி எல் எம் மருத்துவமனை செல்லும் ரயில் தண்டவாள சாலை எப்போது சரி செய்யப்படும் பொதுமக்கள் கேள்வி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரம் டி எல் எம் தொழுநோய் மருத்துவமனை செல்லும் வழியில் ரயில் தண்டவாள கிராசிங் கேட் இயங்கி வருகிறது. இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் தயா நகர், மானாமதுரை புறவழிச்சாலை, டிஎல்எம் மருத்துவமனை உள்ளிட்டவற்றிற்கு பொதுமக்கள் செல்ல அன்றாடம் உபயோகப்படுத்தும் பிரதான சாலையாகும். டிஎல்எம் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக தினம்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் தயாநகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தண்டவாளத்தின் அருகில் உள்ள தார் சாலையை கடப்பதற்கு சாலை சரிசமமாக இல்லாமல் பெயர்ந்து பள்ளமாக உள்ளதால் அவ்வழியாக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், புறவழி சாலைக்கு செல்லும் பயணிகள், தயாநகர் செல்லும் குடியிருப்பு வாசிகள் என அனைவரும் சாலையை கடக்க கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கூடுதலாக இவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், நோயாளிகளின், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஆகியோரின் வாகனங்கள் பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்துக்குள்ளாகி வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் ஆகியோர் பெரும் அச்சத்துடனும், பய உணர்வுக்கு உள்ளாகியும் வருகின்றன. மேலும் மானாமதுரையை கடந்து செல்ல ஏதுவாக எந்த ஒரு ரயில்வே கிராசிங் கேட் தண்டவாளங்களின் சாலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே உடனடியாக ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெரும் அசம்பாவிதங்களை தடுத்திட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நோயாளிகள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment