சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு , கல்லூரி கல்வி இயக்குநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க வழிகாட்டும் பயிற்சி வகுப்பு - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 July 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு , கல்லூரி கல்வி இயக்குநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க வழிகாட்டும் பயிற்சி வகுப்பு


 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு , கல்லூரி கல்வி இயக்குநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க வழிகாட்டும் பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார்.அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவரும் பொறுப்பு முதல்வருமான முனைவர் துரை தலைமை வகித்து அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பாரம்பரியம் மற்றும் அதன் சிறப்புகளை எடுத்துக்கூறி கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்,நான் முதல்வன், புதுமைப்பெண், அரசு உதவித் தொகை, பேருந்து இலவசப் பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் எடுத்துக்கூறி மாணவர்கள் நல்ல முறையில் படித்து தங்கள் வாழ்வில் உயர வேண்டுமென பேசினார். அதன்பின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம்  கலைப் பாடங்கள் குறித்தும் ,  வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் லதா, வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் சார்ந்த மேலாண்மை பாடங்கள் குறித்தும்,    அறிவியல் பாடங்கள் குறித்து தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவள்ளியும் விளக்கிப் பேசினர். கல்லூரியின் புவி அமைப்பியல் துறைத்தலைவர்  முனைவர் உதய கணேசன் கல்லூரியில் செயல்படும் விளையாட்டுத் துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், யூத் ரெட் கிராஸ், நுண்கலை மன்றம், மென்  திறன் பயிற்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், கல்லூரியின்  பாடத் திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். ஆங்கிலத் துறைத் தலைவர்  முனைவர் ஜெயசாலா நன்றியுரையாற்றினார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் செல்வமீனா மற்றும் கெளரவ விரிவுரையாளர் முனைவர் அனிதா ஆகியோர் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad