காரைக்குடியில் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் மகஜர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ உ சி சாலையில் இயங்கி வரும் எல் ஐ சி பொது நிதி நிறுவன இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான சேவை வரியினை ரத்து செய்திடவும், இன்சூரன்ஸ் பிரிமிய சேமிப்புக்கு பிரத்யேகமாக வரி சலுகை வழங்கிடவும், நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து வலிமையாக மாற்றிடவும் வலியுறுத்தி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து மகஜர் அளித்தனர்.,வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தில் இதற்கென குரலெழுப்ப வேண்டுமென மதுரைக்கோட்டச் சங்க நிர்வாகிகள் எஸ்.தணிகைராஜ், எஸ்.நாகராஜன், ஆ.நெல்லியான் கிளை செயலாளர் மற்றும் காரைக்குடி LIC ஊழியர் சங்கத்தினர் ஓய்வூதிய சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment