காரைக்குடியில் காவல்துறையினரின் வாகன சோதனையில் சிக்கிய சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 80 கிலோ குட்கா புகையிலை - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

காரைக்குடியில் காவல்துறையினரின் வாகன சோதனையில் சிக்கிய சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 80 கிலோ குட்கா புகையிலை


காரைக்குடியில் காவல் துறையினரின் வாகன சோதனையில் சிக்கிய சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 80 கிலோ குட்கா புகையிலை


சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ் அறிவுறுத்தலின்படி காரைக்குடி தெற்கு காவல் சார்பு ஆய்வாளர்  தலைமையில் காரைக்குடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது ஏழு மூட்டைகளில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 86 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது., இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்குடி கொப்பரை அம்மன் கோவில் அருகில் மொத்த வியாபாரம் செய்யக்கூடிய திலக்ராம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த குமரவடிவேலு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் டாடா ஏசி வாகனத்தையும் கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad