மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'உலக நிலவு தினம்' மற்றும் 'உலக சதுரங்க தினம்' கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் "உலக நிலவு தினம்" மற்றும் "உலக சதுரங்க தினம்" மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் திருமதி இராஜேஸ்வரி அம்மா அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் திரு ஆர்.ஸகபிலன் அவர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக "நிலவுக்கு குறி வையுங்கள் நீங்கள் தோற்றாலும் நட்சத்திரங்களில் கால் பதிப்பீர்கள்" என்று கூறி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.
மேலும் பள்ளியின் ஆட்சியர் திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் குழந்தைக்கு சதுரங்க விளையாட்டின் முக்கியத்துவத்தை பற்றி "வெற்றி கனியை பறிக்கும் வரை அமைதியாக இரு! வெற்றி அடைந்த பின் உரக்கச் சொல் நானே ராஜா என்று" என குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டினார். விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டனர். இன்றைய தினத்தின் முக்கியத்துவம் பற்றி மாணவ மாணவிகள் நன்கு அறிந்து கொண்டனர். இன்றை தினத்தை பற்றி மாணவர்களுக்கு தெரிவித்ததில் பாபா மெட்ரிக் பள்ளி பெருமை அடைகிறது.
No comments:
Post a Comment