மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டமான 'மக்களுடன் முதல்வர்' முகாம் மானாமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு மானாமதுரை எம்.எஸ்.பி.யு திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் மாங்குளம், தெற்கு சந்தனூர், தெ. புதுக்கோட்டை, மேலநெட்டூர், மேலப்பிடாவூர், கீழப்பிடாவூர், மேலப்பசலை, கீழப்பசலை, எம்.கரிசல்குளம், சின்னகண்ணனூர், கீழமேல்குடி போன்ற கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான ஆணைகளையும் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய துணை பெருந்தலைவர் துணை பெருந்தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, மேலப்பசலை ஊராட்சிமன்ற தலைவர் சிந்துஜா சடையப்பன், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment