சிவகங்கையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள ராயல் திருமண மஹாலில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு கு. செல்வப்பெருந்ததை அவர்களின் தலைமையிலும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு எஸ். ராஜேஷ்குமார் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்த கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலக பொறுப்பாளர்கள், மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் டி. செல்வம், கே. தணிகாசலம், என். அருள் பெத்தையா, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகளின் இந்நாள் - முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டமன்ற இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், மாவட்டத்தை சேர்ந்த இந்நாள் - முன்னாள் மாநில நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment