இளையான்குடியில் 1.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 July 2024

இளையான்குடியில் 1.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்.


இளையான்குடியில் 1.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட சாலைகிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மாண்புமிகு முன்னாள் நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 
இதில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி சிதம்பரம், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி, இளையாங்குடி பேரூராட்சி உறுப்பினர் அ. இ. அல் அமீன், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் நகர வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி முழுமையாக பேச அனுமதி மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிதம்பரம் அவர்கள், "ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கு முயற்சி செய்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது நடத்தப்பட்ட கூட்டங்களில் அப்போதைய குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடி அவர்கள் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேசியுள்ளார், அவரை யாரும் குறுக்கிட்டது கிடையாது" என்றும் பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad