காரைக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன்பு ஒன்றிய பாஜக அரசின் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை வன்மையாக கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜீவ் கண்ணா, காரைக்குடி நகரத் தலைவர் பாண்டிமெய்யப்பன், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார நகர நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment