காரைக்குடி பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில் குரு பூர்ணிமா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரம் இரண்டாவது வீதியில் அமைந்துள்ளது பகவான் ஸ்ரீ சத்ய சாயி ஆலயம். இங்கு குரு பூர்ணிமாவை முன்னிட்டு சாதுக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி மேயர் சே. முத்துத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சேவா சங்கத்தின் தலைவர் டாக்டர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment