மானாமதுரையில் 'பசுமை பணிக்குழு' சார்பாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பயிலரங்கம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 'பசுமை பணிக்குழு' சார்பாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான "தேர்வை கொண்டாடுவோம்" என்ற கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் மானாமதுரையில் உள்ள கோபால் இந்திரா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இப்பயிலரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக, சிறந்த கல்வியாளருக்கான 2021 தேசிய கௌரவ விருது பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் டாக்டர் தாமு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை மற்றும் சொற்பொழிவாற்றினார். சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ. பாலுமுத்து வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் பசுமை பணிக்குழுவினர், நகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். இப்பயிலரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment