சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கர்மவீரர் காமராசரின் 122 ஆம் ஆண்டு பிறந்த நாளையை முன்னிட்டு தேனி மாவட்டம் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி 11.07.2024 அன்று நடைபெற்றது. அப்போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி சார்பாக கலந்து கொண்ட வணிகவியல் துறை மாணவி சார்மதி மற்றும் புவி அமைப்பியல் துறை மாணவி அபிநயா ஆகியோர் ஊக்கப்பரிசும், தமிழ்த்துறை மாணவிகள் பவித்ரா, மாதரசி ஆகியோர் பங்கேற்புச் சான்றிதழும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர்.போட்டியில் பங்கேற்ற மாணவிகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மார்டின் ஜெயப்பிரகாஷ், உறுப்பினர்கள் முனைவர் செல்வமீனா, முனைவர் லட்சுமணக்குமார், ஷர்மிளா உள்ளிட்டோர் வாழ்த்திப் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment