காரைக்குடி அருள்மிகு ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் திருக்கோவில் பச்சை மஞ்சள் அபிஷேகத்திற்கான பச்சை மஞ்சள் அரைக்கும் நிகழ்வில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் குடி கொண்டு அருளாட்சி செய்து வரும் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ அருள்மிகு லலிதா முத்துமாரி அம்மனுக்கு வரும் ஆடி மாத செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சளபிஷேகம், பால்குடம், திருவிளக்கு பூஜை, கணபதி ஹோமம் மற்றும் 108 சங்க அபிஷேகம், வளையல் அலங்காரம், கோமாதா பூஜை என ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன அதன் முதல் கட்டமாக இன்று காரைக்குடி ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பச்சை மஞ்சள் அரைத்து ஸ்ரீ லலிதா முத்துமாரி அம்மனுக்கு மஞ்சள் சாத்தி அபிஷேகம் செய்வதற்கான மஞ்சள் அரைப்பு நிகழ்வானது ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மிக்கல்லில் பச்சை மஞ்சளை அரைத்து சேகரிக்கும் நிகழ்வானது நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் அம்மியில் பச்சை மஞ்சள் அரைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment