மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்திசிலை வளாகத்தில் உள்ள நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையில் காமராஜர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடினர்.
இதில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜீவ் கண்ணா மற்றும் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கோடீஸ்வரன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment